ரஃபேல் விவாவத்தில் மோடியிடம் தோற்றால் அரசியலில் இருந்து விலக தயார்: சித்து

0

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூரில் சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியதாவது, “ரஃபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மோடி அதற்கு தொகை பெற்றாரா என்று அவரை கேட்கிறேன். நாட்டில் எந்த ஒரு பகுதியில் என்னுடன் விவதாத்தில் அவர் கலந்து கொள்ளலாம். நான் தோற்றுப் போனால் அரசியலில் இருந்து வெளியேறுகிறேன். கங்கை நதியின் மகனாக ஆட்சி பொறுப்பேற்ற மோடி, ரஃபேல் ஏஜென்டாக ஆட்சியிலிருந்து வெளியேறுவார். ராகுல் காந்தி ஒரு பீரங்கியை போன்றவர். நான் ஒரு ஏ.கே – 47 போன்றவன்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.