“ரன் கேரளா ரன்” ஒரு கோடி பேர் கலந்து கொண்ட சாதனை ஓட்டம்!

0

கேரளா: கேரளாவில் சச்சின் டெண்டுல்கர் உட்பட ஒரு கோடி பேர் கலந்து கொண்ட ரன் கேரளா ரன் என்ற கின்னஸ் சாதனை படைக்கும் ஓட்டம் நடந்தது.

கேரளாவில் வருகிற ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கு ஆதரவு தெரிவித்தும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும் இன்று கேரளாவில் “ரன் கேரளா ரன்” என்ற பெயரில் ஓட்டம் நடைபெற்றது.

சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு துறை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து ஓட்டத்தில் பங்கேற்றனர்.

காலை 10.20 மணிக்கு தொடங்கிய இந்த ஓட்டத்தில் மொத்தமாக 1 கோடி பேர் பங்கேற்றனர்.

திருவனந்தபுரத்தில் இந்த போட்டியை கேரளா ஆளுநர் சதாசிவம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒரே சமயத்தில் ஒருகோடி பேர் பங்கேற்ற இந்த போட்டி உலக சாதனை படைத்துள்ளதாக போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்

Comments are closed.