ரபேல் போர் விமான ஊழல்: பிரெஞ்சு பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேற்றிய நிர்மலா சீதாராமன்

0

ரபேல் போர் விமான ஊழல்: பிரெஞ்சு பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேற்றிய நிர்மலா சீதாராமன்

பாஜக மீது காங்கிரஸ் முன்வைத்துள்ள ரபேல் போர் விமான ஊழல் குறித்து விளக்கமளிக்க பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று டில்லியில் உள்ள பாஜக ஆலுவலகத்தில் கூட்டப்பட்டது. அங்கு கூடியிருக்கும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேச இருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்ம்மலா சீதாராமன் அங்கு பிரெஞ்சு நாட்டு பத்திரிகையாளர்கள் இருப்பதை கண்டதும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி கூறியுள்ளார்.

முன்னதாக பிரெஞ்ச் பத்திரிகையான மீடியாபார்ட் பிரான்சின் முன்னாள் அதிபரிடம் பேட்டி கண்டது. அந்த பேட்டியில் ரபேல் ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு, ரிலையன்ஸ் நிறுவனம் தான் இந்திய அராசால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரே நிறுவனம் என்றும் தங்களுக்கு வேறு வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இதனை இந்திய பாதுகாப்புத்துறை மறுத்த போதிலும் ஹோலாண்டே தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்தார். இத்துடன் டச்சால்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பத்துறை மூத்த அதிகாரிகள், ரபேல் ஒப்பந்தத்தின் போது, ரியலைனஸ் நிறுவனத்துடன் தான் தாங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நிற்பந்திக்கப்பட்டதாகவும் இல்லையென்றால் அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படாது என்று இந்திய அரசால் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இது தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் தங்கள் உயரதிகாரிகள் ரிலையன்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள சம்மதித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களின் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான HAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாதது கவருத்தமே என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரெஞ்சு பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர் சந்திப்பில் இறுதி நிர்மலா சீதாராமன் வெளியேற்றியது, ரபேல் ஊழல் வழக்கில் இதுவரை மோசமடைந்த தங்களது பெயர் இன்னும் மோசமடையாமல் தவிர்க்க என்று கூறப்படுகிறது.

ரபேல் ஊழலில் தங்களின் பெயரை காப்பாற்றிக்கொள்ள பாஜக நாள் ஒன்றிற்கு ஒரு காரணத்தை கூறி வரும் நிலையில் (பார்க்க செய்திகள் )தற்போது முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போதே டச்சால்ட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்தும் பாஜக செய்தித் தொடர்பாளர் தஜிந்தர் பக்காவும் சில பத்திரிகை செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

ஆனால் உண்மையோ அது டச்சால்ட் மற்றும் முகேஷ் அம்பானியின் RIL நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை குறித்த செய்தியாகும். இதுவும் 2014 ஆண்டு பாதுகப்புத்துறையில் இருந்து ரிலையன்ஸ் வெளியேறியதால் கைவிடப்பட்டது என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிறுவனமோ முகேஷ் அம்பானியின் சகோதரர் அணில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிட்டட் நிறுவனமாகும். இந்த நிறுவனமே ரபேல் ஒப்பந்த்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.