ரமலானும் தனிமனித மாற்றமும்

0

ஈமானின் தூண்களில் ஒன்றான நோன்பு பல்வேறு மகத்தான குறிக்கோள்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நம்மை தரிசித்து விடைபெற்றுச் செல்லும் இவ்வுன்னத வணக்கம் நம்மிடம் விட்டுச் செல்லும் மாற்றங்கள் என்ன என்பதனை நாம் சற்றேனும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அந்த வகையில் இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்றவை பல்வேறு மகத்தான குறிக்கோள்களையும், இலக்குகளையும் தன்னகத்தே பொதிந்துள்ளது. அவற்றில் பிரதானமான இலக்கு மனிதனை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுவது.இதனை அமைந்திருப்பதை அல்குர்ஆனை ஆழமாக படிக்கும் எவரும் இலகுவில் புரிந்து கொள்ளமுடியும்.

தொழுகையின் பிரதான இலக்கை அல்குர்ஆன் வரையறுக்கும் போது “நிச்சயமாக தொழுகையானது மானக்கேடான மற்றும் வெறுக்கத்தக்க விஷயங்களை விட்டும் தடுக்கின்றது.” (அல் அன்கபூத்: 45)

தொழுகையை நல்ல முறையில் நிறைவேற்றுகின்ற மனிதனை அந்த தொழுகை மானக்கேடான மற்றும் வெறுக்கத்தக்க விஷயங்களை விட்டும் பாதுகாத்து நல்ல நிலைக்கு மாற்றுகின்றது.

ஸகாத் எனும் கடமையின் பிரதான குறிக்கோளை அல்குர்ஆன் அடையாளப்படுத்தும் போது,

“நபியே! அவர்களுடைய செல்வங்களிலிருந்து ஸகாத்தை நீர் எடுத்து, அதன் மூலம் நீர் அவர்களை தூய்மைப்படுத்தி பரிசுத்தப்படுத்துவீராக.” (அத் தௌபா: 103)

ஸகாத்தை நல்ல முறையில் நிறைவேற்றுவதன் மூலம் குறித்த மனிதனின் உள்ளம் மற்றும் செல்வம் அதனால் தூய்மைபெறுகின்றது. உலோபித்தனத்திலிருந்து மனிதனை விடுவிக்கின்றது.

ஹஜ் கடமையானது,

“மோசமான பேச்சு, பிழையான நடத்தை, பாவங்கள், பெரும் தவறுகளை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது.” (அல் பகரா:197)

எனவே ஹஜ்ஜும் ஒரு நல்ல மனிதனை, முன்மாதிரி முஸ்லிமை உருவாக்குகின்றது.

நோன்பை கடமையாக்கியதன் குறிக்கோளை அல்குர்ஆன் விளக்கும் போது,

“விசுவாசம் கொண்டோர்களே! நீங்கள் இறையச்சம் கொண்டவர்களாக மாறுவதற்காக உங்கள் முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்ததைப் போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது” (அல் பகரா: 283)

நோன்பு அனைத்து சமூகங்களுக்கும் பொதுவாக விதிக்கப்பட்ட ஒரு கடமை, இறைவன் பற்றிய அச்ச உணர்வை மனித உள்ளத்தில் தோற்றுவிப்பதே அதன் இலக்காகும். அந்த வகையில் ஒரு மாதகால ஆன்மீகப் பயிற்சி நெறியொன்று முஸ்லிம் சமூகத்தின் மீது விதியாக்கபட்டுள்ளது என்று நோன்பின் நோக்கத்தை மேல் குறிப்பிடப்பட்ட வசனம் விளக்குகின்றது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.