ரமலானை அர்த்தமுள்ளதாக்குவோம்

0

ரமலானை அர்த்தமுள்ளதாக்குவோம்

இறையருளால் மீண்டுமொரு ரமலான் நம்மை வந்தடைந்துள்ளது. ஆசையும், ஆர்வமும், பிரார்த்தனையும், சந்தோசமும் உள்ளத்தில் நிரம்பி நிற்கிறது. இந்த ரமலானை நமது வாழ்வின் இறுதி ரமலான் என்று கருதி முழுமையாக பயன்படுத்தி இறை நெருக்கத்தையும், இறை திருப்தியையும் பெறுவதற்கு உள்ளத்தில் உறுதி ஏற்போம். இறைவன் அருள் புரிவானாக.

மனிதன் -& இறைவன் &- இபாதத்

மனிதன் இம்மண்ணின் கதாநாயகன். இந்த பூமிக்கு தலைவனும் கூட. இறைவன் எண்ணிலடங்கா உயிரினங்களை இந்த பூமிப்பந்தில் படைத்திருந்தாலும் அவன் தன்னுடைய பணிக்காக மனிதனைத் தான் தேர்ந்தெடுத்துள்ளான். இத்திருப்பணியை செய்யும் பொருட்டே மற்ற உயிரினங்களுக்கு வழங்கிடாத சிந்திக்கும் ஆற்றலை (அறிவை)  இறைவன் மனிதனுக்கு வழங்கினான்.

ஏழு வானங்களுக்கு மேல் அர்ஷில் உள்ள இறைவனை மண்ணில் உள்ள மனிதன் தனது அறிவாலும் ஆன்மாவலும் உணர்ந்து கொள்ள முடியும். படைத்த இறைவனை அறிவது மனிதனின் அடிப்படை நோக்கமாகும். பிரபஞ்சத்தின் இரகசியத்தையும், பூமியில் புதைந்திருக்கும் இரகசியத்தையும் ஆய்ந்தறிந்து சிந்திப்பதன் மூலம் படைத்த இறைவனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஏனெனில் காண்பவற்றை அடிப்படையாக வைத்து காணக் கிடைக்காத ஒன்றை கணித்தறியும் ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கியுள்ளான்.

மனிதன் படைப்பினங்களின் இரகசியங்களை உணரும் போதுதான் உள்ளத்தில் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் மீது தக்வா எனும் இறையுணர்வு பிறக்கின்றது. இதையே அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்,

அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்கள் கல்விமான்கள் தான். (அல்குர்ஆன் 35 : 28)

மேலும் இத்தகையவர்களுக்கு தான் அல்லாஹ் நேர்வழி காட்டுகின்றான்,

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும் (அல்குர்ஆன் 2 : 2)

படைத்த இறைவனை தெளிவாக விளங்கி அவனை வழிபடும் போதுதான் நம்முடைய வணக்க வழிபாடுகள் அர்த்தமுள்ளதாக அமையும். இல்லாதபட்சத்தில் வணக்க வழிபாடுகள்  வெறும் சம்பிரதாயமாகவே அமையும்.

இறைவனை நோக்கிய பயணம் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் என்றால் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் உட்பட அனைத்து வணக்க வழிபாடுகளையும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன், இறை நினைவுடன் மேற்கொள்ள வேண்டும். இதனை அலி (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்கள்,

விளக்கமின்றி செய்கின்ற இபாதத்களிலும்; தெளிவில்லாத அறிவிலும்; ஆய்வில்லாமல், சிந்தனையில்லாமல் ஓதுகின்ற அல்குர்ஆனிலும் எவ்வித பயனுமில்லை.

இபாதத்களினால் உலகத்தில் ஏற்பட வேண்டிய விளைவுகளை குறைவாகவே காண முடிகின்றது. தொழும் பலரின் உடல் மட்டுமே தொழுகின்றது, ஆனால் உள்ளம் தொழுவதில்லை. அதே போல் நோன்பு நோற்கும் பலரின் உடல் மட்டுமே நோன்பு நோற்கின்றது, ஆனால் உள்ளம் நோன்பு நோற்பதில்லை. அல்லாஹ்வை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டியது உள்ளமே தவிர உடலல்ல. உடல் உள்ளத்தின் கட்டளைக்கு மட்டுமே ஒத்துழைக்கும். இறைவனை வழிபடுவது நமக்கு பாரமாக இருக்கக் கூடாது; நேசமாக இருக்க வேண்டும். நம்வாழ்வில் இதுவரை நாம் மேற்கொண்ட இபாதத்களின் ஊடாக இறைத்தொடர்பு பலம் பெற்றுள்ளதா? என்ற கேள்வியோடு ரமலான் குறித்த சிந்தனைக்குள் நுழைவோம்.

ரமலான் -& நோன்பு &- தக்வா

நோன்பு கடமையாக்கப்பட்ட மாதம்; சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக்கூடிய புர்கான் (அல்குர்ஆன்) அருளப்பட்ட மாதம்; ஆயிரம் மாதங்களை விட சிறப்பான லைலத்துல் கத்ர் இரவை கொண்ட மாதம்; ஒரு நற்செயலுக்கு 10 முதல் 700 மடங்கு வரை நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்; தொழுகை, நோன்பு, இஃதிகாப், ஜகாத், சதகா, பித்ரா என அனைத்து கடமைகளையும் ஒரு சேர நிறைவேற்றும் பாக்கியம் நிறைந்த மாதம்; மனிதன் தன்னை முழுமையான மீள்வாசிப்புக்கு உட்படுத்தி சுத்திகரித்துக் கொள்ளும் மாதம்; பாவங்களை கரிக்கும் மாதம்; பத்ருப் போரில் வெற்றி, மக்கா வெற்றி, மங்கோலிய தார்த்தாரியர்களுக்கு எதிரான போரில் வெற்றி, சிலுவை யுத்தங்களில் வெற்றி, ஸ்பெயின் வெற்றி என உலக சரித்திரத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்ட பல்வேறு வெற்றிகளை அள்ளிக் குவித்த மாதம்தான் ரமலான்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.