ரயில்களில் வழங்கப்படும் உணவு உண்ணத் தகுந்தவை அல்ல: மத்திய கணக்கு தணிக்கை பிரிவு அறிக்கை

0

இந்திய ரயில்வேயின் உணவுப் பிரிவில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேனப்படுவது இல்லை என்றும் ரயில்களில் பரிமாறப்படும் உணவுகள் மனிதர்கள் உண்ணத் தகுதியானவை இல்லை என்றும் மத்திய தணிக்கை பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட 74 ரயில் நிலையங்கள் மற்றும் 80 ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உணவுப் பிரிவு மற்றும் ரயில்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணப்படுவதில்லை என்று மத்திய தணிக்கை பிரிவு வெள்ளிகிழமை பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது.

இதில், “மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்ற பொருட்களும், மறுசுழற்சி செய்யப்பட்ட உணவுகளும், கெட்டுப்போன உணவுகளும், தேதி காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களும் அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டல்கள், முதலியவை ரயில் நிலையங்களில் வழங்கப்படுகின்றது என்று CAG தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் சுத்தீகரிக்கப்படாத குழாயில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட குடிநீர் ரயிலில் வழங்கப்படும் பானங்களை தயாரிக்க பயன்படுத்தப் படுவதாகவும், குப்பைத் தொட்டிகள் சரிவர மூடப்படாமலும் உணவுப் பொருட்கள் மூடபப்டாத நிலையில் எலிகள், ஈக்கள், பூச்சிகள், கரப்பான் பூச்ச்கள் ஆகியன மொய்த்த நிலையில் ரயிலில் உள்ளதகாவும் அந்த அறிக்கையில் CAG தெரிவித்துள்ளது.

ரயிலில் நடமாடும் உணவுப் பிரிவில் வழங்கப்படும் உணவுகளுக்கு ரசீதுகள் வழங்கப்படுவதில்லை என்றும் உணவுப் பொருட்களின் கட்டணங்கள் அச்சிடப்பட்ட மெனு கார்டுகள் அங்கு இல்லை என்றும் CAG தெரிவித்துள்ளது.

இன்னும் ரயிலில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட அளவை விட குறைவாகவே வழங்கப்படுகிறது என்றும் உணவுப்பொருட்கள் சந்தையில் விற்கப்படும் விலையை விட ரயில் நிலையங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் CAG குறிப்பிட்டுள்ளது.

ரயில் கட்டணங்கள் பாஜக அரசால் உயர்த்தப்பட்ட நிலையில் ரயிலில் வழங்கப்படும் சேவைகளின் தரமும் உயர்வடையும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு நேர் மாற்றமாய் இந்த அறிக்கை உள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்னதாக ரயிலின் உணவுப் பிரிவில் ஊழல் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.