ரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்

0

மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்ட ரயில் டிக்கெட்டை வழங்கிய இரண்டு ஊழியர்களை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

மக்களவைத் தேர்தல் வருவதால் மோடியிடன் படம் இடம்பெற்றுள்ள ரயில் பயணச்சீட்டுகள், தேநீர் கப்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த 2 வாரங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில், பராபங்கி ரயில் நிலையத்தில் நேற்று கொடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகளில் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில் இரண்டு ஊழியர்களை ரயில்வே நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.

Comments are closed.