ரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பேச அனுமதி: தமிழுக்கு நோ சொன்ன தென்னக ரயில்வே!

0

கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி மதுரை திருமங்கலத்தில் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டதற்கு கட்டுப்பாட்டு அறைகள் இருந்த ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மொழி பிரச்னையே காரணம் என கூறப்பட்டது.இதனை தொடர்ந்து, இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தென்னக ரயில்வே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை ஸ்டேசன் அதிகாரிகள் தொடர்பு கொள்ளும் போது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும், மற்ற மொழிகளில் பேசும் போது புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைய அதிகாரிகள், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளி்ல் பேசுவதை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் ஸ்டேசன் அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தமிழகத்தில், தமிழ் அதிகாரிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.