ரயில் நிலையங்களில் உள்ள அரசியல் விளம்பரங்களை உடனே அகற்ற உத்தரவு

0

ரயில் நிலையங்களில் உள்ள அரசு தொடர்பான விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு ரயில் வாரிய தலைவர் உத்தரவு விடுத்துள்ளார். தேர்தல் விதி முறைகள் அமலில் உள்ள நிலையில் ரயில்வே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யில் நிலையங்களில் உள்ள  டீ கடைகளில் விற்கப்படும் டீ கப்களில் ”நான் காவலாளி ” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் டிக்கட்டுகளில் மோடி படம் அச்சடிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இதனால் ரயில்வே துறையில் பிரச்சனை ஏற்பட்டது.

இதனையடுத்து ரயில்வே வாரிய தலைவர் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ரயில்வே டிக்கெட், பொருட்கள், பெட்டிகள், நிலையங்கள் மற்றும் வளாகங்களில் அரசியல்  தலைவர்களின் படங்களுடன் விளம்பரங்கள் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.