ராகுல் தான் அடுத்த பிரதமர்! அதை மோடியே பார்ப்பார்- பி.சி.சாக்கோ

0

ராகுல் காந்தி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் பி.சி.சாக்கோ.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக போகிறார். அதை மோடி பார்க்க தான் போகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: இந்தியாவின் முதல் குடும்பமான நேரு குடும்பத்தின் மீது பிரதமர் மோடி எதிர்மறையான கருத்துக்களை கொண்டுள்ளார். இந்தியா விண்வெளியில் செய்த சாகசம் பற்றி மோடி பேசுகிறார். ஆனால் உண்மை என்வென்றால், இந்தியா இன்று இந்தியாவாக இருப்பதற்கு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு வகுத்த திட்டங்கள் தான் காரணம்.

மோடிக்கு இந்திய வரலாறு பற்றி தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது என்ன நிலைமை இருந்தது? பசுமை புரட்சி, வெண்மை புரட்சியால் தான் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியது. நேரு ஆட்சி காலத்தில் தான் அனைத்தும் நடந்தது.

ராகுல் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆக போகிறார். இதனை மோடியும் பார்க்கத்தான் போகிறார் என்றார்.

Comments are closed.