ராகுல் காந்தி போதைப் பொருள் பயன்படுத்துகிறார்: சு.சுவாமி சர்ச்சை கருத்து!

0

பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்கள், போதைப் பொருள் பழக்கமில்லாதவர் என உறுதி செய்ய ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்தது.

இதற்கு மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இந்த சோதனைகளை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் கூட செய்ய வேண்டும் என கூறினார். இதனை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, “அமைச்சர் பாதல் கூறியதை நான் வரவேற்கிறேன். ராகுல் காந்தி கொகைன் பயன்படுத்தி வருகிறார். அவரை மருத்துவ சோதனை செய்தால் அதை கண்டறியலாம். போதை மருந்து சோதனையில் அவர் நிச்சயம் தோல்வி அடைவார்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியியனருக்கிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சத்தீச்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் காவல்நிலையத்தில் சுப்ரமணியன் சுவாமி மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட பஞ்சாப் மாநில காவல்துறை குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது.

Comments are closed.