ராகுல் காந்தி மீதான வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு: வாக்கு எண்ணிக்கை காரணமா?

0

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரத்தில் மக்களின் வரிப்பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை அனில் அம்பானிக்கு மோடி கொடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த அனில் அம்பானி, ராகுல் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவதூறு கருத்துக்களை பரப்பும் காங்கிரஸ் கட்சி எனக்கு நஷ்டஈடு தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில் திடீர் திருப்பமாக ரஃபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்ற விடுமுறை முடிந்த பின் வழக்கு வாபஸ் பெறப்படும். இதற்கான கடிதம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.