ராஜஸ்தானில் முஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை!

0

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந் மாவட்டத்தில் முஸ்லிம் காவல் துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்து  கொலை செய்யப்பட்டுள்ளார்.

தலைமை கான்ஸ்டேபிள் அப்துல் கனி வழக்கு தொடர்பாக விசாரணை முடித்து விட்டு ஹமிலாகிபர் என்ற கிராமத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த அப்துல் கனியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி மூலம் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.