ராஜஸ்தான்: கொலைகார பசு பாதுகாவல் கும்பல் மீது கொலை வழக்கு

0

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆழ்வார் பகுதியில் பசுக்களை ஏற்றிச் சென்றவர்களை பசு பாதுகாவல் கும்பல் வழிமறித்து கடுமையாக தாக்கியது இதில் ஒருவர் உயிரிழந்தார். (பார்க்க செய்தி)

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் விபின் யாதவ், ரவீந்திர யாதவ் மற்றும் காலு ராம் யாதவ் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் இந்த தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இந்த கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அல்ல என்று தெரியவந்துள்ளது.

தகுந்த ஆவணங்களை வைத்துக்கொண்டு மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மறித்து அதில் உள்ளவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு காவல்துறை தாக்கப்பட்டவர்கள் மீது அவர்கள் பசுக்களை கடத்தினர் என்று வழக்கு பதிவு செய்துள்ளது.

இவர்கள் தாகப்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோகாட்சி சமூக வலைதளங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு காவல்துறையினருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுளளனர்.

இந்த காட்டுமிராண்டித் தனத்தை பல தலைவர்களும் கண்டித்து வரும் இந்த வேலையில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் காடாரியா இரு தரப்பிலும் தவறு உள்ளது என்று கூறி இந்த தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்க முயற்ச்சித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பசுக்களை கடத்தியது தவறு என்றும் அவர்களை தாக்கியவர்கள் காவல்துறையினரிடம் அவர்களை பிடித்து கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பெஹ்லு கான் பால் பண்ணை வைத்திருப்பவர் என்றும் அவர் தனது பண்ணைக்காக அடிக்கடி மாடுகளை வாங்குவதும் விற்பதும் வழக்கம் என்று பெஹ்லு கானின் சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.