ராஜஸ்தான்: சமஸ்கிருத ஆசிரியர்களாக மாற்றப்பட்ட 40 உருது ஆசிரியர்கள்

0

அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்த 40 உருது ஆசிரியர்களை சமஸ்கிருத ஆசிரியர்களாக மாற்றி ராஜஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த உத்தரவு கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த மாற்றங்கள் தவறுதலாக நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பள்ளி கல்வித்துறை இந்த தவறு விரைவாக சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. உருது மாணவர்கள் அதிகம் இல்லாத பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சமஸ்கிருத ஆசிரியர்களாக மாற்றப்பட்டதாக அதன் துணை இயக்குனர் தெரிவித்தார்.

Comments are closed.