ராஜஸ்தான் நகராட்சி தேர்தல்:பா.ஜ.க.வுக்கு பின்னடைவு

0

மக்களவை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி ராஜஸ்தானில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய பா.ஜ.கவுக்கும், 15 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதல்வர் வசுந்தராஜே சிந்தியாவின் செல்வாக்கு மிகுந்த ஜாலாவர், டோல்பூர் உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க தோல்வியை தழுவியது.

ராஜஸ்தானில் 129 நகராட்சி கவுன்சிகளில் 60 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியபோதும் 40 கவுன்சில்களை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 17 கவுன்சில்களில் இரு கட்சிகளும் சம நிலையில் உள்ளன.ஏழு கவுன்சில்களில் சுயேட்சைகள் வெற்றிப் பெற்றுள்ளனர். தற்போது ராஜஸ்தான் அரசியலில் காங்கிரசும், பா.ஜ.க.வும் சம நிலையில் உள்ளன. 3351 வார்டுகளில் கிட்டத்தட்ட பாதி இடங்களில் காங்கிரசும், பா.ஜ.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானமே நகராட்சி தேர்தல் முடிவுகள் என்றும், மக்களவை தேர்தலில் இரு கட்சிகளுக்கு இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் ஒரு சதவீதமாக குறைந்துள்ளதாகவும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

 

Comments are closed.