ராஜஸ்தான்: பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ராஜினாமா

1

ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் கைலாஷ் நாத் பட் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகவத்திற்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறித்து இரண்டு தினங்களுக்கு முன் இவர் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மோகன் பகவத்திற்கு எதற்காக இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்? இதனை அவர் ஏற்றுக் கொண்டாரா?’ என்று இரண்டு தினங்களுக்கு முன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனிடையே மோகன் பகவத் குறித்து தான் எழுப்பிய கேள்விகள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பலரை காயப்படுத்தியதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் இன்று தெரிவித்துள்ளார்.

Discussion1 Comment

  1. மாஷா அல்லாஹ்..
    விடியலின் பதிவுகள்..
    நம்பகத்தன்மை உள்ளவையாகவும் ..ஆதாரப்பூர்வமானதாகவும் உள்ளது..