ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது பாட்டில் வீச்சு!

0

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சோடா பாட்டில் வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளாது.

இந்த நிலையில் அதிமுகவுடன் இணைந்து பாஜக நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் சந்திக்கிறது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் அதிமுக, பாமக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது பாட்டில் ஒன்று வீசப்பட்டது. அந்த பாட்டில் அருகில் இருந்த அதிமுக நிர்வாகி மீது பட்டதில் மண்டை உடைந்தது. இதனால் இப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதில் காயமடைந்த அதிமுக நிர்வாகி ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைபோலவே தஞ்சை ஒரத்தநாட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது செருப்பு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.