ராமனின் அம்புகள் ISRO வின் ராக்கட்களைப் போன்றது: IITM இல் விஜய் ரூபாணி

0

ராமனின் அம்புகள் ISROவின் ராக்கட்களைப் போன்றது என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள மணிநகர் IITM இன் முதல் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ரூபாணி, “ராமனின் ஒவ்வொரு அம்பும் ஒரு ராக்கட். ISRO தற்போது என்ன செய்கிறதோ  அதை தான் ராமர் அந்தக் காலத்திலும் செய்தார்.” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், “உள்கட்டமைப்பையும் ராமரையும் இணைத்துப் பார்த்தால், இந்தியா இலங்கை இடையே கடலில் ராம் சேது பாலம் அமைக்க எத்தகைய பொறியாளர்களை அந்த காலத்தை அவர் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். அணில்கள் கூட அந்த பாலத்திற்கு தங்களது பங்களிப்பை கொடுத்தன. ராமனின் கற்பனை தான் அந்தக்காலத்து பொறியாளர்களால் உணரப்பட்டது.“ என்று கூறியுள்ளார்.

நவீன கால தொழில்நுட்பங்களுக்கு புராண கால உதாரணங்களை தொடர்ந்த அவர், “லக்ஷ்மணனை குணப்படுத்த சரியான மூலிகை எது என்பதை அறியாத ஹனுமான், ஒட்டு மொத்த மலையை தூக்கி வந்தார். அந்தகக் காலத்தில் ஒரு மலையை தூக்கும் அளவிற்கு எந்த வகையான தொழில்நுட்பம் இருந்தது என்பதை எண்ணி நாம் ஆச்சர்யமடைகிரோம். இதுவும் உள்கட்டமைப்பு குறித்த ஒரு நிகழ்வு.” என்று கூறியுள்ளார்.

ராமன் விண்ணில் பறந்து தாக்கும் ராக்கட் மற்றும் மலைகளை நகர்த்தும் பொறியியல் தொழில்நுட்பத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை என்றும் அவர் அனைத்து சாதி மக்களை ஒன்றிணைத்தார் என்றும் ஷாப்ரி வழங்கிய பழங்களை உண்டு ஆதிவாசிகளின் நம்பிக்கையையும் பெற்றார் என்றும் சுக்ரீவன் மற்றும் ஹனுமனை இணைத்து குரங்குகளின் படையை திரட்டினார் என்றும் இவை அனைத்தும் ராமனின் சமூக பொறியியல் கலைகள் என்று அவர் கூறியுள்ளார்.

இவற்றின் இந்த கருத்துக்கள் அடங்கிய சொற்பொழிவு மேடையில் ISRO விண்வெளி மைய இயக்குனர் தபன் மிஸ்ராவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.