ராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு

0

ராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நிர்மோகி அகரா குற்றச்சாட்டு

ராமர் கோவில் பெயரைச் சொல்லி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சுமார் 1400 கோடி ரூபாய்களை குவித்துள்ளது என்று நிர்மோகி அகரா தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி வழக்கில் ஒரு கட்சியான நிர்மோகி அகராவின் உறுப்பினரான சீதாரம் இது குறித்து தெரிவிக்கையில், இந்த பணம் அனைத்தையும் நன்கொடை என்கிற பெயரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார். “இதுவரை நிர்மோகி அகரா யாரிடமிருந்தும் பணம் பெற்றதில்லை. ஆனால் விஷ்வ ஹிந்து பரிஷத் கோவில் கட்டுகின்றோம் என்று பணம் பெற்று கொண்டு அவர்கள் தங்களுக்குத் தான் கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த வழக்கில் நாங்கள் தான் முக்கிய தரப்பினர். ஆனால் இந்த அரசியல்வாதிகள் தங்களின் உள்நோக்கத்திற்காக இப்பிரச்சனையை திருட நினைக்கின்றார்கள். இந்த பணத்தை வைத்துதான் அவர்கள் அரசு அமைத்தார்கள். அவர்கள் நன்கொடையாக பெற்ற ரூபாயில் ஒரு பைசா கூட ராமர் கோவிலுக்காக பயன்படுத்தப்படவில்லை. இந்த அரசியல்வாதிகள் ராமர் கோவிலின் பெயரில் வோட்டுக்களையும் நோட்டுக்களையும் பெற்றுவிட்டு எதையும் செய்யாமல் உள்ளனர்.” என்று சீதாராம் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வினோத் பன்ஸால், 1964 இல் தங்கள் இயக்கம் துவக்கப்பட்ட காலம் முதல் அனைத்து பணத்திற்கும் முறையான கணக்கு வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போதைய இந்த பிரச்சனை, பாபர் மசூதி வழக்கு குறித்து அனைத்து தரப்பினரிடமும் தான் பேசப்போவதாக வாழும் கலை ரவிஷங்கர் அயோத்யா சென்றாதால் ஏற்பட்டுள்ளது.

Comments are closed.