ராம்தேவிற்கு மலிவு விலையில் கொடுக்கப்பட்ட நிலங்கள்: கேள்வி கேட்ட அதிகாரி பணியிடமாற்றம்

0

கடத்த வருடத்தில் நாக்பூரில் உணவு பூங்கா நிறுவுவதற்கு பாபா ராம்தேவின் நிறுவனமான பதாஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்திற்கு ஏறத்தாழ 75% தள்ளுபடியில் நிலம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்ட ஆவணங்களில்  மகாராஷ்டிர அரசின் இந்த முடிவிற்கு அதிகார தரப்பில் எதிர்ப்பும் எழுந்துள்ளது தெரியவந்துள்ளது.

அரசின் இந்த முடிவிற்கு மூத்த அதிகாரியும் பொருளாதார சீர்திருத்தங்களின் முதன்மைச் செயலாளருமாக பணியாற்றிய பிஜெய் குமார் என்ற அதிகாரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இந்த நில பரிவர்த்தனை குறித்தும் அது விலைக்கு வழங்கப்பட்ட தொகை குறித்தும் பிஜெய் குமார் கேள்வி எழுப்பிய மூன்று வாரங்களில் அவர் 2016 ஏப்ரல் 29 ஆம் தேதி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் அவர் பணிக்கு சேர்ந்து ஒன்றரை வருடங்களுக்கு உள்ளான காலத்தில் ஏற்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஒரு அதிகாரி மூன்று வருட சேவைக்கு பின்னரே பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். தனது இந்த நிலை குறித்து தற்போது விவசாயத்துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கும் பிஜெய் குமார் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நில பரிவர்த்தனையை செய்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்த பரிவர்த்தனை மிகவும் வெளிப்படையாகவே நடந்தது என்றும் அந்த அதிகாரியின் இடமாற்றம் வழக்கமானது தான் என்றும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு அவரது விருப்ப பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலப் பரிவர்த்தனைக்கு குமார், MIDC முன்னாள் CEO பூஷன் கக்ராணி, MADC முன்னாள் MD விஸ்வாஸ் படில் ஆகியோர் அடங்கிய துணைக் குழு விலையை பரிந்துரைத்தது. இந்த குழுவிற்கு நகர மேம்பாட்டு செயலாளர் நிதின் கரீர் தலைமை தாங்கியுள்ளார்.

தற்போது வழங்கப்பட்ட இந்த நிலத்தின் விலை ஒரு சதுர மீட்டருக்கு 2500 ரூபாய் என்று இருந்தாலும் அது உணவு பூங்காவிற்கு மிக அதிகாமான விலை என்று விஸ்வாஸ் படில் கூறியுள்ளார். மேலும் பிற மாநிலங்களில் சலுகை விலைக்கு நிலம் வழங்கப்படுவதாகவும் அதனால் இந்த உணவுப் பூங்கா நாக்பூரில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்லக்கூடும் என்றும் கூறியுள்ளார். மேலும் முன்னதாக இதே போன்று சலுகை விலையில், போயிங் மற்றும் சத்யம் நிறுவனத்திற்கு நிலங்கள் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலத்தின் விலையை குறைக்க உள்கட்டமைப்பிர்கான விலையை நிலத்தின் விலையில் இருந்து அந்த குழு கழித்துள்ளது. இது ஒரு சதுர மீட்டர் நிலத்தின் விலையில் இருந்து ரூபாய் 1000 த்தை குறைத்துள்ளது. இதனை மேலும் பலவாரியாக குறைத்து சதுர மீட்டருக்கு 625 ரூபாயாக விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

மேலும் பதாஞ்சலி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த சலுகை விலையை சரி செய்ய அந்த நிலத்தை சுற்றியுள்ள பகுதிகளின் விலை அதற்கேற்றார் போல் உயர்த்தப்பட வேண்டும் என்றும் அந்த குழு முடிவு செய்துள்ளது. பதாஞ்சலி நிறுவனத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு 25 லட்ச ரூபாய் என்கிற விகிதம் 300  ஏக்கர் நிலம் சலுகை விலையில் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீதம் உள்ள 1050 ஏக்கர் விற்கப்படாத நிலங்களின் விலை 15% உயர்த்தப்பட வேண்டும் என்றும் அந்த அந்த குழு முடிவு செய்துள்ளது.

பதாஞ்சலி நிறுவனத்திற்கான இந்த சலுகை திட்டமும் அதனை சுற்றியுள்ள விற்கப்படாத பிற நிலங்களுக்கான விலை உயர்த்தப்பட்டது குறித்தும் திருப்தி இல்லாத குமார், அவர்களது கருத்தில் இருந்து மாறுபட்டுள்ளார். மேலும் இநத்தகைய விலை நிர்னையங்கள் விரிவான கணக்கீட்டை ஆதாரமாக கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனை அவர் அந்த சந்திப்பின் இறுதியில் எழுத்துப்பூர்வமாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த குழுவின் தலைவர் நிதின் கரீர் கூறுகையில், முதலில் தங்கள் குழுவினருக்கு நிலம் வழங்கப்படும் சலுகை விலை குறித்து திருப்தி இல்லை என்றும் பின்னர் இந்த விலையை நிர்ணயிக்க அதிகமான தகவல்கள் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

இறுதியில் மகாராஷ்டிரா முதல்வர் தலைமை தாங்கும் Maharashtra Airport Development Corporation (MADC) இந்த விலை நிர்ணயத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நில விற்பனையில் பங்கு பெற்ற ஒரே நிறுவனம் பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.