ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றபின் பாராளுமன்றத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்

0

இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றத்தில் பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பியுள்ளனர். முதன் முதலில் இந்த கோஷங்கள் பாபரி மஸ்ஜித் இடிப்பின் போது பரவலாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பீகார் ஆளுநரும், ஆர்எஸ்எஸ் இன் உறுப்பினருமான ராம்நாத் கோவிந்தின் வெற்றிக்கு தான் இந்த கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் இது போன்ற கோஷங்கள் எழுப்பப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த மார்ச் மாதம் உத்திர பிரதேசம் மற்றும் உத்திராகன்ட் மாநில தேர்தல் வெற்றிக்குப் பிறகு நரேந்திர மோடி பாராளுமன்றத்திற்குள் நுழைகையிலும் இந்த கோஷம் எழுப்பட்டது.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஜராத் முன்னால் IPS அதிகாரி சஞ்சீவ் பட், மதசார்பற்ற பாராளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது போன்று பாராளுமன்றத்தில் அல்லாஹு அக்பர் என்ற கோஷம் எழுப்பப்பட்டால் இவர்களின் அதனை ஏற்றுக்கொள்வார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.