ரா மற்றும் ஐபி தலைவர்களின் பதவிக்காலத்தை ஆறு மாதம் நீடித்து உத்தரவிட்ட அரசு

0

ரா மற்றும் ஐபி தலைவர்களின் பதவிக்காலத்தை ஆறு மாதம் நீடித்து உத்தரவிட்ட அரசு

இந்திய (வெளிநாட்டு) உளவு அமைப்பான ரா வின் தலைவர் A.K.தாஸ்மானா மற்றும் ஐ.பி. யின் தலைவர் ராஜீவ் ஜெயின் ஆகியோரின் பதவிக்காலத்தை ஆறு மாதகாலம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வருகிற டிசம்பர் 29 ஆம் தேதியுடன் தாஸ்மானாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. ராஜீவ் ஜெயின் இன் பதவிக்காலம் டிசம்பர் 30 ஆம் தேதி முடிவடைகிறது. தற்போது பாஜக அரசின் இந்த முடிவிற்கு காரணம் இன்னும் ஆறு மாத காலத்தில் தேர்தல் வர இருப்பதால் இந்த முக்கிய இடங்களுக்கு தேர்தல் முடிந்து வரும் புது அரசு தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதாக கூறப்பட்டுள்ளது.

தாஸ்மானா 1981 ஆம் ஆண்டு மத்திய பிரதேச பிரிவு அதிகாரி ஆவார். இவர் கடந்த 23 வருடங்களாக ராவில் பணியாற்றி வருகிறார். இவர் தனது பதவிக்காலத்தில் பாகிஸ்தான் உட்பட பல முக்கிய இடங்களில் பணியாற்றியவர். ராஜீவ் ஜெயின் 1980 ஆம் ஆண்டு ஜார்கண்ட் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.இவர் டிசம்பர் 20 2016 ஆம் ஆண்டு ஐ.பி. யின் தலைவராக இரண்டாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.ஜனாதிபதியின் காவல்துறை பதக்கம் பெற்ற இவர் கஷ்மீர் உட்பட உளவுத்துறையின் பல பகுதியில் பணியாற்றியவர்.

இவர்களின் பதவிகளுக்கு அடுத்த தேர்வாக இருப்பவர்கள் 1984 ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு அதிகாரி சமந்த் கோயல் மற்றும் K.இளங்கோ ஆகியோர் ஆவர்‌. இதில் கோயலின் பெயர் சிபிஐ யில் நடைபெறும் அதிகாரச் சண்டையில் உச்சரிக்கப்பட்ட பெயராகும். இவர் மொயின் குரேஷி ஊழல் விசாரணை வழக்கை நீர்த்துப் போகச் முயற்சித்தார் என்று இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.

கோயல் மற்றும் இளங்கோவுடன் 1984 பீகார் பிரிவு அதிகாரி அரவிந்த் குமார் மற்றும் மத்திய பிரதேச காவல்துறை தலைவர் ஆர்.கே.ஷூக்லா ஆகியோரும் ஐ.பி. தலைவர் பதவிக்கு பரிந்துரை பட்டியலில் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments are closed.