ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்: 2000 ரூபாய் நோட்டில் உர்ஜித் படேல் கையெழுத்து

0

மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 2000  ரூபாய் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் இருந்த காலத்திலேயே அச்சிடப்படத் துவங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதில் ரகுராம் ராஜனின் கையெழுத்திற்குப் பதிலாக உர்ஜித் படேலின் கையெழுத்து உள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை இரண்டு ரிசர்வ் வங்கி அச்சகங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதியில் இருந்து அச்சடிக்க தொடங்கியாத தெரிவித்துள்ளனர். இது உர்ஜித் படேலை அரசு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அறிவித்த பின் உள்ள முதல் பனிநாள் ஆகும். ஆனால் உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அறிவிக்கப்பட்டாலும் அப்போதைய நடப்பு ஆளுநரான ரகுராம் ராஜனிடம் இருந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கழித்து தான் அதாவது செப்டம்பர் 4 ஆம் தேதி தான் தனது பணியில் அமர்ந்தார். அப்படியிருக்க ஆகஸ்ட் மாதம் 22  ஆம் தேதி உர்ஜித் படேலின் கையெழுத்துடன் எப்படி புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு பிரபல பத்திரிக்கை ஒன்று அனுப்பிய கடிதத்திற்கு பதில் ஏதும் தரப்படவில்லை. மேலும் புதிய 500 ரூபாய் தாள்கள் அச்சடிக்கும் பனி தொடர்பான உத்தரவு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி தான் தங்களுக்கு கிடைக்கப்பட்டதாக பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் அச்சகம் தெரிவித்துள்ளது. இதில் இருந்து நவம்பர் 8 ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களை செல்லாது என்று அறிவித்த வெகு நாட்கள் கழித்து இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பல கேள்விகள் பொதுமக்களிடம் இருந்தாலும் இந்த நடவடிக்கை குறித்த தகவல்களை வெளியிடுவதில் அரசும் ரிசர்வ் வங்கியும் மெளனம் காத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.