ரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன?

0

ரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன?

மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே மீதமுள்ள நிலையில் பொருளாதார, தொழில் துறைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி நடத்திய சர்வே வெளியாகியுள்ளது. இரண்டு மும்பை, பெங்களூர், அஹமதாபாத், திருவனந்தபுரம் முதலான 13 நகரங்களில் நடத்திய சர்வேயில் பொருளாதார நிலை மேம்படவில்லை என்றும் தேவைக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றும் சர்வேயில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சர்வேயில் பங்கேற்ற 35.2 சதவீதம் பேர் தங்களுடைய தொழில் சூழல் மேம்பட்டுள்ளதாக கூறியபோதும் 45.5 சதவீதம் பேர் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பொருளாதார துறை மிகவும் பின்தங்கியுள்ளதாக 44.3 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தவர்கள் 33.7 சதவீதம் பேர் மட்டுமே.

ஆனால், ரிசர்வ் வங்கியின் ஆய்வு பொருளாதார, தொழில் துறைகளோடு ஒதுங்கிவிட்டது.விவசாயம், சிறு, குறு தொழில் முதலான இதர துறைகளில் கருத்துக்கணிப்புகளை நடத்தினால் இதைவிட மோசமான முடிவுகளே கிடைக்கும்.இத்துறைகளை சார்ந்தவர்களெல்லாம் மிகுந்த நிராசையிலும், அதிருப்தியிலும் உள்ளனர். விவசாயிகளின் தற்கொலைகள் பீதிவயப்படுத்துகின்றன. தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரப்படி 2014ல் நாட்டில் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 2015ல் இந்த எண்ணிக்கை 8,007 ஆக அதிகரித்தது. 1965 முதல் 2015 வரையிலான 50 ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த புள்ளிவிபரத்தை வருடந்தோறும் மத்திய அரசு வெளியிட்டு வந்தது. ஆனால், 2015க்கு பிறகு அதனை வெளியிடுவதில்லை. தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களுக்கு தெரிந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு பயந்தே மத்திய அரசு இதனை மூடி மறைக்கிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Goto Index

Comments are closed.