ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி நீக்கப்படுவார்: ஹரியானா பா.ஜ.க அமைச்சர் அணில் விஜ்

0

ஹரியானாவின் பா.ஜ.க. அமைச்சர் அணில் விஜ், “ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தியின் படம் விரைவில் நீக்கப்படும்” என்றும் “காந்தியை விட மோடியின் மதிப்பு அதிகமானது” என்றும் கருத்து தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“காந்தியின் படம் எப்போது ரூபாய் தாள்களில் அச்சிடப்பட்டதோ அப்போதிலிருந்தே அதன் மதிப்பும் குறையத் தொடங்கிவிட்டது” என்றும் “அவர் அந்த தாள்களில் இருந்தும் அகற்றப்படுவார்” என்றும் அணில் விஜ் கூறியுள்ளார்.

முன்னதாக காதி கிராம தொழிச்சாலை கழகத்தின் காலண்டர் மற்றும் டைரிகளில் வழக்கமாக அச்சிடப்பட்டு வந்த காந்தியின் படம் நீக்கப்பட்டு அங்கே மோடி ராட்டை சுத்துவது போன்ற படம் அச்சிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்த அணில் விஜ், “மோடிக்கும் காதிக்குமான தொடர்பு ஏற்பட்டதில் இருந்தே அதன் விற்பனையில் 14% அதிகமானது. காந்தியின் மதிப்பைவிட மோடியின் மதிப்பு அதிகம்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பா.ஜ.க. அமைச்சர் அணில் விஜ் சர்ச்சைகளுக்கு புதிதானவர் அல்ல. மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.