ரூ.2000 வந்துவிட்டதா? வரவில்லையா? விவசாயிகளிடம் அசிங்கப்பட்ட ராஜ்நாத் சிங்

0

பாஜக அரசு தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு , ரூ.2000 வழங்கப்பட்டதாக அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன் தினம் பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது கூடியிருந்தோரை பார்த்து, ‘எனது அன்பு விவசாய சகோதரர்களே, உங்களுக்கு உதவி தொகையின் முதல் தவணை ரூ.2000 வந்து விட்டதா? எத்தனை பேருக்கு ரூ,2000 வந்துள்ளது? ‘ என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அங்கு குட்டியிருந்த விவசாயிகள் தங்களுக்கு வரவில்லை என குரல் எழுப்பினார்கள்.

உடனே ராஜ்நாத் சிங், ‘இல்லை. இப்படி நடக்க வாய்ப்பில்லை. கிடைக்காதவர்கள் கையை உயர்த்துங்கள்’ என கூறியதும் அனைவரும் கை உயர்த்தி உள்ளனர். அதன் பிறகு அவர், ‘சரி. கிடைத்தவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்’ என கூறி உள்ளார். ஒருவரும் கை உயர்த்தவில்லை. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

Comments are closed.