ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் இந்தியா: ஐ.நா கடும் கண்டனம்

0

மியான்மரில் அரசு, ராணுவத்துடன் சேர்ந்து புத்த மத வெறியர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்து பல்வேறு அநியாயங்களை செய்து வருகின்றனர்.

எனவே தங்கள் உயிரை பாதுகாக்க உடமைகளை விட்டுவிட்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசம், இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடி பெயர்ந்தனர். மியான்மரில் இன்னும் அமைதி திரும்பாத நிலையில் ரோஹிங்கிய அகதிகளை இந்தியா கட்டாயப்படுத்தி நாடு கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில், இந்தியாவின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதாக ஐநா மனித உரிமை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தார்.

மேலும் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்நிலையில் ஐநாவின் இந்த கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் “சட்டவிரோதமாக குடியேறுபவர்களை இந்திய சட்டத்தின் அடிப்படையில் தான் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுகிறார்கள்.

சட்டவிரோத குடியேற்றத்திற்கு இந்திய நீதிமன்றங்கள் வழங்கிய வழிமுறைகளின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Comments are closed.