ரோஹிங்கிய அகதிகள் முகாமை நாங்கள் தான் எரித்தோம். ட்விட்டரில் பாஜக இளைஞரணித் தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்

0

ரோஹிங்கிய அகதிகள் முகாமை நாங்கள் தான் எரித்தோம். ட்விட்டரில் பாஜக இளைஞரணித் தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்

கடந்த 15ஆம் தேதி தில்லியின் கழிந்தி குஞ் பகுதியில் உள்ள ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பெரும் தீ ஏற்ப்பட்டு அந்த அகதிகள் முகாம் முற்றிலுமாக சேதமடைந்தது. இதில் அந்த அகதிகள் முகாமில் வசித்து வந்த சுமார் 225 அகதிகள் தங்குவதற்கு இடமின்றியும் தங்களது உடைமைகளையும் அதுவரை தாங்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பொருளாதாரம் அனைத்தையும் இழந்து நிர்கதியாக நின்றனர்.

இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் வேலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரோஹிங்கிய அகதிகள் முகாமை தாங்கள் தான் தீயிட்டு எரித்ததாக பாஜக இளைஞரணித் தலைவர் மனிஷ் சந்தெல்லா தெரிவித்துள்ளார். மனிஷ் சந்தெல்லா தனது பதிவில், “ஆமாம், நாங்கள் தான் அதனை செய்தோம். இனியும் செய்வோம், “#ROHINGYA QUIT INDIA” என்று பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் மீது தில்லி காவல்துறை ஆணையரிடம் புகரளிக்கப்பட்டுள்ளது. பல முஸ்லிம் அமைப்புகளின் ஒருங்கிணைப்பான “All India Muslim Majlis-e-Mushawarat (AIMMM)” தங்களது புகாரில், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை சேர்ந்த மனிஷ் சந்தெல்லா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமை தீயிட்டு கொளுத்தியது தாங்கள் தான் என்றும் அதனை மேலும் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளதை உங்களது கணவதிற்கு கொண்டு வருகிறோம், என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அவரது பதிவின் நகல் ஒன்றையும் தங்களது புகாருடன் அவர்கள் இணைத்துள்ளனர். இந்த கருத்தை முதலில் ஏப்ரல் 15 அன்று அதிகாலை 2:16  மணியளவிலும் பின்னர் ஏப்ரல் 16 மாலை 5:42 மணியளவிலும் பதிவிட்டுள்ளார் சந்தெல்லா. அவரது அந்த பதிவு இணையத்தில் பெருமளவு பகிரப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி தனது ட்விட்டர் கணக்கை அழித்துள்ளார் சந்தெல்லா.

சமூக வலைதளத்தில் தாங்கள் செய்த குற்றச்செயல் குறித்து குற்றவாளி வெளிப்படையாக அறிவித்துள்ளது டில்லி காவல்துறை மற்றும் பிற சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்புகளுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால் என்றும் சந்தெல்லாவின் பதிவு அகதிகள் முகாமில் தீ பற்றிய சில நிமிடங்களில் பதிவாகியுள்ளது என்றும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் முறையான பிரிவுகளில் சத்தெல்லாவை கைது செய்ய வேண்டும் என்றும் AIMMM இன் தலைவர் நவைத் ஹமித் தெரிவித்துள்ளார்.

Comments are closed.