ரோஹித் வெமுலா தற்கொலையில் இருந்து மக்களை திசை திருப்பவே JNU மாணவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது: முன்னாள் ABVP உறுப்பினர்கள்

0

ரோஹித் வெமுலா தற்கொலையில் இருந்து மக்களை திசை திருப்பவே JNU மாணவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது: முன்னாள் ABVP உறுப்பினர்கள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ABVP அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் ஜதின் கோரையா மற்றும் முன்னாள் இணைச் செயலாளர் பிரதீப் நர்வாள் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ரோஹித் வெமுலாவின் மரணத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே JNU மாணவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகங்களில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று JNU மாணவர்கள் கோஷம் எழுப்பியதாக பரப்பட்ட காணொளியில் உள்ளவர்கள் ABVP உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நடைபெற்ற 2016 பிப்ரவரி 9 ஆம் தேதி ABVP பொறுப்பில் இருந்த இவர்கள், குறிப்பிட்ட இந்த சம்பவம் ரோஹித் வேமுலா தற்கொலையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப திட்டமிடப்பட்டு ABVP யினரால் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த இருவரும் 2016 பிப்ரவரி தங்களது ABVP பதவியில் இருந்து விலகினர். இது குறித்து பிரதீப் கருத்து தெரிவிக்கையில், “அச்சமையம் ஜதின், மற்றும் என்னிடம், நாங்கள் இருவரும் தலித் என்பதால் தொலைக்காட்சியில் தோன்றி ரோஹித் வெமுலா விவகாரத்தில் ABVP ஆதரவாக பேட்டி தருமாறு பலமுறை வற்புறுத்தப்பட்டோம். ஆனால் ரோஹித் வெமுலாவை இவர்கள் தீவிரவாதி என்று குறிப்பிட்டதால் நாங்கள் அத்தகைய நிகச்சிகளில் பங்கெடுக்க மறுத்துவிட்டோம். பிப்ரவரி 9 நடைபெற்ற நிகழ்சியை அவர்கள் வெமுலா நிறுவன படுகொலையில் இருந்து மக்களை திசைதிருப்பும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டனர்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதனை எப்படி பெரிதுபடுத்துவது என்பது தொடர்பாக ABVP வாட்ஸப் குழுமத்தில் விவாதிக்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த கருத்துக்களுக்கு பதிலளித்தABVP யைச் சேர்ந்த JNU மாணவர் அமைப்பு இணைச் செயலாளர் சௌரப் ஷர்மா, இவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டனர் என்றும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது ABVP மீது இந்த குற்றச்சாட்டுகளை வைத்தவர்களில் பிரதீப் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். ஜதின் எந்தக் கட்சியிலும் இணையவில்லை.

Comments are closed.