ரோஹின்கிய அகதிகளில் சுமார் 14000 பேர் பெற்றோரை இழந்த சிறுவர்கள்: ஐநா

0

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மேல் மியான்மர் இராணுவம் நடத்தும் கொடுமைகளில் இருந்து தப்பி பங்களாதேஷ் எல்லையை தாண்டியவர்களில் சுமார் 14000 பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் என்று ஐநா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐநா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் இருந்து சுமார் 5,36,000 பேர் மியான்மாரில் நடக்கும் வன்முறைகளில் இருந்து தப்பி அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் சுமார் 14,000 பேர் தங்களது இரு பெற்றோர்களையோ அல்லது பெற்றோர்களில் இருவரில் ஒருவரையோ இழந்த குழந்தைகள் என்று ஐநா தெரிவித்துள்ளது.

ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் முகாமில் எடுகப்பட்ட கணக்கெடுப்பில் 13751 சிறுவகள் தங்களது பெற்றோர்களை இழந்தவர்கள் என்று தெரியவந்துள்ளதாக பங்களாதேஷ் சமூக சேவைத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்த துரையின் துணை இயக்குனர் ப்ரிதம் குமார் சவுத்திரி கூறுகையில், “இதில் பெரும்பாலானோர் தங்களது பெற்றோகளில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்தவர்கள்.” என்றும் “பிறர் தங்களது பெற்றோருக்கு என்ன ஆனது என்றே தெரியாதவர்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.

மியான்மரின் ராகைன் பிராந்தியத்தில் நடக்கும் வன்முறைகள் இனப்படுகொலை தொடர்பான பாடம் என்றும் இங்கு ஒட்டு மொத்த கிராமங்கள் அழிக்கப்பட்டு கூட்டு கற்பழிப்புகளும் இனப்படுகொலைகளும் மொத்தம் மொத்தமாக நடைபெற்று வருகிறது என்று ஐநா தெரிவித்துள்ளது. இந்த வன்முறையில் இருந்து தப்பி பங்களாதேசில் தஞ்சமடைந்த மூன்றில் ஒரு பங்கினர் ஐந்து வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்று ஐநா தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் 1200 ஹெக்டேர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய அகதிகள் முகாம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 8,00,000  அகதிகள் தங்க வைக்கப்பட உள்ளனர். கடந்த மாதம் குழந்தைகளுக்கென தனி அகதிகள் முகாம் கட்ட 200 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பங்களாதேஷ் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கு பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் தங்க வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.