லக்னோ இலக்கிய திருவிழா இந்துத்வ அமைப்பின் போராட்டத்தை அடுத்து ரத்து

0

லக்னோவில் நடக்கவிருந்த இலக்கிய திருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வ அமைப்புகள் போராட்டம் நடத்திய காரணத்தால் அந்த திருவிழாவை உத்திர பிரதேச அரசு ரத்து செய்துள்ளது.

இந்த இலக்கிய திருவிழாவில் பங்கு பெறுவதற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவ அமைப்பின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் லக்னோ சென்றிருந்தார். இந்நிலையில் கன்னையா குமாரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ABVP, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பு, மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் கோஷம் எழுப்பின. கண்ணையா குமாரை பேச விடாமல் இந்த கும்பல் கோஷம் எழுப்பி வந்தது.

இந்த திருவிழாவில் தனது “பீகாரில் இருந்து திகார் வரை” புத்தகம் குறித்து அவர் பேசுவதற்கு இந்துத்வ கும்பல் அனுமதிக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஷீரோஸ் கஃபே இன் பணியாளர்களான ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மேடைக்கு வந்து அந்த கும்பலின் கோஷத்தை அமைதி படுத்தியுள்ளனர். ஆயினும் இந்துத்வா கும்பல் இந்த விழாவை தொடர அனுமதிக்கவில்லை. அவர்கள் கன்னையா குமாரை தேச விரோதி என்று கூறி கூச்சலிட்டனர்.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்த கன்னையா குமார் சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட கும்பத்தில் உள்ள தன்னை எப்படி இவர்கள் தேச விரோதி என்று கூற முடியும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தங்கள் ஆதரவு இந்துத்வவாதிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி “ஒரு இடையூறு” என்று தெரிவித்த உத்திர பிரதேச பாஜக அரசு இந்த நிகழ்ச்சிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக அரசு பிறபித்த உத்தரவில் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியின் விதிகளை மீறிவிட்டதாகவும் அதனால் இந்த நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் இருக்க காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கன்னையா குமாருடன் சத்ருகன் சின்ஹா, அஸதுதின் உவைசி மற்றும் பல பிரபலமான ஊடகவியலாளர்கள் உரையாற்ற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.