லடாக்-ஐ யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு!

0

ஜம்மு காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மிர் மாநிலம் லடாக் என்ற ஒரு பகுதியாகவும், ஜம்மு காஷ்மீர் என்ற மற்றொரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டது. இதில், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக செயல்படும்.

மேலும் சீனா, லடாக்கினை பிரித்தது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனா வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூவா சூயுங் அளித்த பேட்டியில், ”இந்திய – சீனா எல்லைக்குள் நுழைவதற்கு என்றுமே சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அப்படி இருக்கையில், சீனாவின் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் இந்தியா தன்னுடைய சட்ட விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதனை சீனா ஏற்றுக் கொள்ளாது. இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக இந்தியா செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “காஷ்மீர் மறுசீரமைப்பு என்பது உள்நாட்டு விவகாரம். இந்தியா, எந்தவொரு உள்நாட்டு விவகாரத்திலும் தலையிட்டு கருத்து தெரிவிக்காது. அதுபோல மற்ற நாடுகளும் இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். இந்தியா-சீனா எல்லை ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் ஆலோசித்துதான் இதனை ஒத்துக் கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Comments are closed.