லண்டனில் பதற்றம்: தொழுகையின்போது பள்ளிவாசல் வெளியே துப்பாக்கி சூடு!

0

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தொடங்கிய முதல், இஸ்லாமியர்கள் புனித நோன்பு கடைபிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், லண்டனில் உள்ள செவன் கிங்ஸ் மசூதியில், ரமலான் தொழுகை நடைபெற்று வந்த சமயத்தில், மர்ம நபர் ஒருவர் மசூதிக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றமும் ஏற்பட்டது.

முன்னதாக கடந்த மாதம் நியூசிலாந்து மசூதியில் தீவிரவாதி துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், தற்போது லண்டன் மசூதிக்கு வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

லண்டனின் பகுதியில் இல்போர்டில் செவன் கிங்ஸ் என்ற மசூதியில் ரமலான் சிறப்பு தொழுகையில்போது, முகமூடி அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் வந்த ஒருவன், துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே மசூதிக்குள் நுழைய முயன்றான். அப்போது அவனை சிலர் மடக்கி உள்ளனர். ஆனால் அந்த மர்ம நபர் அவர்களிடம் இருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்று காவல்துறையினர் அறிவித்து உள்ளனர். இருந்தாலும்  மசூதிக்கு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது

Comments are closed.