‘லவ் ஜிஹாத்’ உருவாக்கப்பட்ட கட்டுக்கதை -NIA

0

‘லவ் ஜிஹாத்’ உருவாக்கப்பட்ட கட்டுக்கதை -NIA

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் வி.முஹம்மது அலி ஜின்னா, அக்டோபர் 20 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், லவ் ஜிஹாத் என்று எதுவும் இல்லை என்பதை NIA கண்டறிந்துள்ளது உண்மைக்கு கிடைத்த வெற்றியாகும். மேலும், பொய்யை வைத்து பிழைப்பு நடத்தும் சக்திகளுக்கு இது மிகப்பெரிய அடி ஆகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் பாசிச சக்திகளால் லவ் ஜிஹாத் என்று மிகைப்படுத்தி கூறப்பட்ட 11 கலப்புத் திருமண வழக்குகளின் விசாரணையை முடித்த பிறகும் கூட கட்டாய மதமாற்றத்திற்கான எந்த திட்டமிட்ட சதி நடவடிக்கைகளும் இருப்பதற்கான ஆதாரத்தை NIAவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்பதை இதற்கு முன்பே கேரளா மற்றும் கர்நாடகா காவல்துறை கண்டுபிடித்ததை நினைவில் கொள்ள வேண்டும். ‘லவ் ஜிஹாத்’ என்பது கட்டுக்கதை என்ற உண்மையை NIAவின் சமீபத்திய விசாரணை முடிவுகள் மீண்டும் உறுதி செய்துள்ளது. இது சமூகத்தில் மோசமான நீண்ட விளைவுகளை ஏற்படுத்தி மதவாத பிளவுகளை உருவாக்குவதற்காக வலதுசாரி இந்துத்துவ சக்திகளால் புத்திசாலித்தனமாக அரங்கேற்றப்பட்ட மிக மோசமான பிரச்சாரமாகும். முஸ்லிம் சமூகம் மற்றும் இயக்கங்களின் நற்பெயர்களை களங்கப்படுத்தியது மற்றும் லவ் ஜிஹாத் என்ற பிரச்சாரத்தை மிகைப்படுத்தியதில் ஊடகங்களில் ஒரு பிரிவினருக்கும் பங்கிருக்கிறது. இது தேசத்தின் அரசியலமைப்பால் உறுதிசெய்யப்பட்ட தனிநபரின் உரிமையை பறிப்பதற்கான முயற்சியாகும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.