லவ் ஜிஹாத் பிரச்சாரத்தை மீண்டும் துவங்க உள்ளது ஆர்.எஸ்.எஸ்.  

0

உத்திர பிரதேசத்தில் தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். தனது பிரிவுகளில் ஒன்றான ஹிந்து ஜாக்ரன் மன்ச் இடம் லவ் ஜிஹாத் பிரச்சாரத்தை மீண்டும் துவக்க வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளது.

இது குறித்து சந்திப்பு ஒன்றினை ஆக்ராவில் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த சந்திப்பில் ஹிந்து ஜாக்ரன் மன்ச் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் லவ் ஜிஹாத் பிரச்சாரத்தில் எப்படி பட்ட யுக்திகளை கையாள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த அமைப்பிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணை தலைவர் அஜ்ஜூ சவ்ஹான் இந்த சந்திப்பிற்கு தலைமை தாங்குவர். இவர் தான் கடந்த வருடம் பஜ்ரங்தள் அமைப்பில் இருந்து மகளை காப்பாற்றுங்கள், மருமகளை பெறுங்கள் ‘bahu lao-beti-bachao’ என்ற கோஷத்துடன் லவ் ஜிஹாதுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவிக்க சவ்ஹான் மறுத்துவிட்ட போதிலும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் இந்த பிரச்சாரத்தை சத்தமில்லாமல் நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மற்றொரு தலைவரான வருண் உபாத்யாய் கூறுகையில், ஆக்ராவை சுற்றியுள்ள பகுதிகளில் லவ் ஜிஹாத் அதிகமாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் இந்து பெண்களை கேலி செய்வது அங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கல்லூரிகளில் லவ் ஜிஹாத் எதிர்ப்பு ஏஜெண்டுகள் உருவாக்கப்படுவார்கள் என்றும் இவர்கள் லவ் ஜிஹாத் என்று சந்தேகிக்கும் வகையில் ஏதாவது நடவடிக்கை தெரிந்தால் தங்கள் அமைப்பிற்கு தகவல் தெரிவிப்பார்கள் என்றும் பின், தங்கள் அமைப்பினர் அந்த பெண்ணின் குடும்பத்திடம் சென்று பேசி அவர்களை லவ் ஜிஹாதில் இருந்து மீட்பார்கள் என்று கூறப்படுகிறது.

Comments are closed.