லஷ்கர் தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட அப்துல் கரீம் துண்டா அனைத்து வழக்கில் இருந்தும் விடுவிப்பு: டில்லி நீதிமன்றம்

0

இந்தியாவில் 40 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர் என்றும் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர் என்றும் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் துண்டாவை டில்லி நீதிமன்றம் நிரபராதி என்று தீர்பளித்துள்ளது. 1997 இல் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ செய்து குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

டில்லி காவல்துறை இவர் மீது சுமத்திய நான்காவது மற்றும் இறுதியான வழக்கு இதுவாகும். IPC 121, 121 A, உட்பட பல்வேறு பிரிவுகளில் இவர் மீது டில்லி காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. அக்டோபர் 1, 1997 சாதர் பஜார் குண்டு வெடிப்பிலும், அக்டோபர் 28, 1997 ஆம் ஆண்டு கரோல் பாக்கில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் இவர் தொடர்புடையவர் என்றும் குற்றம் சாட்டியிருந்தனர். அனைத்து வழக்கிலும் இவர் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் இவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்திய நேபால் எல்லைப் பகுதியில் வைத்து ஆகஸ்ட் 16, 2013 ஆம் ஆண்டு இவரை கைது செய்ததாக சிறப்பு பிரிவு காவல்துறையினர் கூறியிருந்தனர்.

இந்த வழக்குகளில் துண்டாவுடன் அவரது மாமானார் முஹம்மத் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் என்று கூறப்பட்ட அலாவுத்தீன் பஷிருத்தீன், ஆகியோரையும் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.

Comments are closed.