வங்கதேசம்: ஜமாத்தே இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை உறுதிபடுத்தப்பட்டது

0

வங்க தேச ஜமாத்தே இஸ்லாமி தலைவர் முகம்மது கமருஸ் ஸமானுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டின் உச்சநீதி மன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.63 வயதான கமருஸ் ஸமான் ஜமாத்தே இஸ்லாமியின் துணை பொதுச்செயலாளர் ஆவார்.
1971ல் வங்க தேச சுதந்திர போராட்டத்தின் போது பாகிஸ்தான் இராணுவத்தினருடன் இணைந்து ஏராளமான வங்க தேச மக்களை கொலை செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.அவரின் சொந்த மாவட்டமான ஷெர்பூரில் 164 மக்களை கொலை செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.கடந்த வருடம் நவம்பர் 3 அன்று இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால் இத்தீர்ப்பை எதிர்த்து மார்ச் 5 அன்று இவர் மேல்முறையீடு செய்தார்.
தற்போது உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ள நிலையில் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யும் வாய்ப்புள்ளது.ஆனால் இது பெரும்பாலும் நிராகரிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சிறப்பு சட்டத்தின் கீழ் போர் குற்றவாளிகளை வங்க தேசம் விசாரித்து வருகிறது.டிசம்பர் 2013ல் ஜமாத்தே இஸ்லாமியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார்.ஆளும் ஷேக் ஹஸினா அரசின் அரசியல் பழி வாங்கும் செயல் இது என்று ஜமாத்தே இஸ்லாமியும் ஏனைய எதிர் கட்சிகளும் கூறி வருகின்றன.

Comments are closed.