வங்கி மோசடி காரணமாக நாடு முழுவதும் 50 இடங்களில் சிபிஐ திடீர் ரெய்டு

0

நேற்று சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக மேற்குவங்க மாநிலத்தின் 22 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்திய நிலையில், இன்று நாடு முழுவதும், 12 மாநிலங்களில், 18 நகரங்களில் 50 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்ற திடீர் ரெய்டு காரணமாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.