மேற்கு வங்காளத்தில் பசு திருட்டு சந்தேகத்தில் 2 சிறுவர்கள் அடித்துக் கொலை

0

மேற்கு வங்காளத்தின் பருகாலியா கிராமத்தில் பசு திருட்டு சந்தேகத்தில் 19 வயது சிறுவர்கள் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட இருவரில் ஒருவர் கோச் பெஹார் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் மற்றுமொருவர் அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் வந்த வாகனத்தை ஓட்டி வந்த மூன்றாவது நபர் கொலைகார கும்பலிடம் இருந்து தப்பி துப்ஹுரி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

அதிகாலை நான்கு மணியளவில் கால்நடைகள் ஏற்றப்பட்ட வாகனம் ஒன்றில் மூன்று பேர் செல்வதை கண்ட மர்ம நபர்கள் அந்த வாகனத்தை மறித்து நிறுத்தியுள்ளனர். பின்னர் அந்த வாகனத்தில் இருந்த கால்நடைகளை அதிலிருந்து இறக்கி அந்த வாகனத்திற்கு தீவைத்துள்ளனர். பின்னர் அதில் வந்த மூன்று பேரை பிடித்து அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிர் தப்பி காவல்நிலையம் சென்றடைந்துள்ளார்.

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமிதாவா மைதி கருத்து தெரிவிக்கையில், “இந்த கொலையில் ஈடுபட்டவர்களை நாங்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் இது இரண்டாவது சம்பவமாகும். கடந்த ஜூன் மாதம் வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் மூன்று பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். பக்ரித் பெருநாள் சமீபத்தில் இருக்க அந்நாளில் பசுக்களை பலியிட பசு பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கு குறிப்பிடத்தகது.

Comments are closed.