வடநாட்டின் சாதி அரசியல்: ராகுலின் தந்திரோபாயம் வெற்றிபெறுமா?

0

வடநாட்டின் சாதி அரசியல்: ராகுலின் தந்திரோபாயம் வெற்றிபெறுமா?

சென்ற நவம்பர் 26 அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் ஒரு காஷ்மீர கவுல் பார்ப்பனர் எனவும் தனது கோத்திரம் தாத்ரேயம் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அது ஏற்கனவே ஏற்பாடு செய்தபடி பத்திரிகைகளிலும் செய்தியாகியது. எல்லாம் மிகவும் இயல்பாக நடப்பதுபோல நடந்தேறியது. எப்படி என்கிறீர்களா? தேர்தல் நடக்கும் ராஜஸ்தானுக்கு ராகுல் செல்கிறார். அஜ்மீரில் உள்ள புஷ்கார் என்னும் இடத்தில் பிரம்மாவுக்கு ஒரு கோயில் உண்டு. இந்தக் கடுமையான தேர்தல் பிச்சாரத்திற்கிடையில் ராகுல் காந்தி அங்கு சென்று வணங்குகிறார். அர்ச்சனைக்கு முன்பாக குலம், கோத்திரம் கேட்பார்கள் அல்லவா? அப்போது ராகுல் தன்னை இப்படி அடையாளப் படுத்திக் கொண்டார். அழைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் அதைப் பதிவு செய்து கொண்டனர். ஒரு நான்கு நாட்களுக்கு முன்பே, என்ன கோத்ரம் எனக் கேட்டால் ‘தாத்ரேய கோத்ரம்’ என்று திக்கித் திணறாமல் சொல்வதற்கு அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. பிறகு அது நம்மூர் பத்திரிகைகள் வரைக்கும் செய்தியாகியது.

காந்தி, நேரு முதலான மதச் சார்பின்மையை உயர்த்திப் பிடித்த காங்கிரஸ் பேரமைப்பு இந்த நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய வரலாற்றுப் பின்னணி மிகவும் சுவையானது.

காங்கிரசின் ஊடக ‘மேனேஜர்’ ரண்தீப் சூரஜ்வாலா மிகப் புத்திசாலித்தனமாக திட்டமிட்ட நடவடிக்கை இது.

இந்தச் சாதி அமைப்பு முறையில் வடநாட்டுக்கும் தென்னகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அங்கே சத்திரிய, வைசிய சாதி அல்லது வருணங்கள் எல்லாம் கணிசமாக உண்டு. அதேபோல பார்ப்பனர்களின் எண்ணிக்கையும் இங்குபோல வெறும் இரண்டரை சதம் எல்லாம் கிடையாது. உத்தர பிரதேசத்தில் அது 10 சதத்துக்கும் மேல். மற்ற வட மாநிலங்களிலும் அது அதிகம். அதை மனதிற்கொண்டு மேலே வாசியுங்கள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.