வதந்தியும் வன்முறையும்

0

வதந்தியும் வன்முறையும்

உண்மையை ஊர் அறியும் முன், பொய் உலகை சுற்றி வந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய நவீன உலகில் உண்மை வீட்டை விட்டு கிளம்பும் முன் பொய் உலகை நான்கு முறை வலம் வருவதோடு நான்கைந்து உயிர்களையும் காவு வாங்கி வருகிறது என்பதுதான் துன்பகரமான உண்மை. ஆன்ட்ராய்ட் போன்கள் அனைவரின் கைகளிலும் தவழும் இன்றைய நாட்களில் செய்திகள் வெகுவிரைவாக பரவுகின்றன. பரவும் இந்த செய்திகளில் பாதிக்கும் மேற்பட்டவை பொய்தான் என்பதையும் நாம் அறிந்தே உள்ளோம். ‘இந்த செய்தியை பகிர்ந்தால் இந்த குழந்தைக்கு ஒரு டாலர் கிடைக்கும்’ என்று தொடங்கிய பொய்கள் இன்று ‘இந்த செய்தியை பகிரவில்லையென்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என்று பீதியை ஏற்படுத்தும் அளவிற்கு சென்றுள்ளன.

மார்ச் மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏறத்தாழ 25 பேர் கும்பல் வன்முறைக்கு பலியாகியுள்ளார்கள். தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்கம் என நாட்டின் நாலாபுறங்களிலும் நடத்தப்பட்ட இந்த கும்பல் வன்முறை ஒருவித அச்ச உணர்வை நாட்டு மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. அத்தனை கொலைகளுக்கான காரணமும் பின்னணியும் ஒன்றுதான். குழந்தை கடத்தல் மற்றும் உடல் உறுப்புகள் திருட்டு தொடர்பாக வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட சில வீடியோகள்தான் இவற்றுடன் தொடர்பே இல்லாத அப்பாவிகளின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.