வன்முறையில் முடிந்த ஹிஜாபிற்கு எதிரான ABVP காவி துப்பட்டா போராட்டம்

0

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் ABVP யினர் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக காவி சால்வைகளை அணிந்து போராட்டம் நடத்தி வந்தனர். (பார்க்க செய்தி)

இந்த போராட்டத்தின் போது வகுப்பிற்கு காவி சால்வை அணிந்து வராத மாணவர் ஒருவர் மீது ABVP யினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பட்களில் உள்ள Government First Grade கல்லூரியில் இரண்டாம் ஆண்டு BA பட்டப்படிப்பு படித்து வருபவர் ஜெயந்த் நைகா. இவர் கடந்த புதன் கிழமை கல்லூரிக்கு காவி சால்வை அணியாமல் வந்துள்ளார். இதனையடுத்து இவரை சூழ்ந்து கொண்ட ABVP யினர் இவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து இதில் பாதிக்கப்பட்ட ஜெயந்த் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்துள்ளர். அவர் தனது புகாரில் குற்றம் சாட்டிய நபர்கள்  நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுளளது.

Comments are closed.