வயநாடு தொகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால்தான் ராகுல் போட்டியிடுகிறாரா?

0

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு பேசிய ராகுல் காந்தி, “தென் இந்தியாவுடன் நாங்கள் நிற்போம் என்பதை வெளிப்படுத்தி, வயநாட்டில் போட்டியிடுகிறேன்” என்றார்.

ஆனால், பயத்தின்  காரணமாகவே ராகுல் காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுவதாக பாஜக கூறிவருகிறது. மதத்தை அடிப்படையாகக் கொண்டே, ராகுல் காந்தி இவ்வாறு முடிவெடுத்திருப்பதாக, மகாராஷ்டிராவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கேலியாக பேசியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு பிறகு  வயநாடு தொகுதியில் இந்துக்களை விட அதிகளவில் முஸ்லிம்களே இருப்பதால்தான், ராகுல் அத்தொகுதியை தேர்ந்தெடுத்தார் என்று சமுக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும், இதனை காங்கிரஸ் ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை விட, இந்துக்களே அங்கு அதிகம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

Comments are closed.