வயநாடு பேரணி: காயம்பட்ட செய்தியாளர்ளுக்கு ஓடி வந்து உதவிய ராகுல் காந்தி

0

வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்த பிரச்சாரத்தில் சிறிய விபத்து ஏற்பட்டு மூன்று பத்திரிக்கையாளர்கள் காயம் அடைந்தனர்.

இவர்களை ராகுல் காந்தி உடனடியாக காப்பாற்றி ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.  பிறகு வயநாட்டில் பிரச்சார பேரணி மேற்கொண்டார். இதை காண பெரிய அளவில் கூட்டம் கூடியது. அப்போது அந்த பகுதியில் கூட்ட நெரிசல் காரணமாக சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் பிரச்சார செய்தியை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் சாலை தடுப்பிற்கு அருகே நின்று கொண்டு இருந்தனர்.  கூட்ட நெரிசல் காரணமாக கீழே விழுந்த 3 செய்தியாளர்களுக்கு கொஞ்சம் மோசமாக காயம் ஏற்பட்டது. அப்போது சரியாக அங்கு ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் ராகுல் காந்தி தனது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி வந்து வேகமாக அந்த செய்தியார்களை அருகே இருந்த ஆம்புலன்சில் ஏற்றினார். தற்போது இந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

Comments are closed.