வரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா!

0

வரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா!

தென்கிழக்கு ஆசியாவில் வலுவான தேசமான மலேசியாவில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அறுபது ஆண்டுகளாக நாட்டை ஆண்ட யுனைடட் மலாய் நேசனல் ஆர்கனைசேஷன் (அம்னா) தலைமையிலான பாரிசான் தேசிய முன்னணியை எதிர்கட்சி கூட்டணி தோற்கடித்து அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கியது.

பக்தான் ஹாரபான் என்ற பெயரிலான முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மது தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 121 இடங்களை வென்றது. ஆளுங்கட்சியான பாரிசான் நேசனல் ஆர்கனைசேஷனுக்கு 79 இடங்களே கிடைத்தன. சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற 54 இடங்களை அக்கட்சி இழந்தது. ஆனால் எதிர்கட்சிகளின் கூட்டணியோ கடந்த தேர்தலை விட கூடுதலாக 54 இடங்களை வென்றது. அப்துல் ஹாதி அவாங்க் தலைமையிலான இஸ்லாமிய கூட்டணி 18 இடங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

இருபத்திரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக மலேசியாவின் பிரதமராக பதவி வகித்த மஹாதீர் முஹம்மது தனது 92-வது வயதில் மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தபோது உலகிலேயே அதிக வயதில் பிரதமராக பதவியேற்றவர் என்ற சிறப்பை பெற்றார். இதன் மூலம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடித்தார். ஆனால், அதை விட ஆச்சரியமான விஷயம், தனது கடின உழைப்பால் வளர்த்தெடுத்த அம்னா தலைமையிலான பாரிசான் முன்னணிக்கு எதிராக அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகும்.

இன்னொரு ஆச்சரியமான விஷயமும் இருக்கிறது. தான் பிரதமராக பதவி வகித்தபோது துணை பிரதமராக பதவி வகித்த, தனக்கு போட்டியாக உருவாகிவிடுவாரோ என்ற பயத்தில் தம்மால் பாலியல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அன்வர் இப்ராஹீம் துவக்கிய கட்சியின் சார்பாகத்தான் மஹாதீர் போட்டியிட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சி கூட்டணிக்கு மஹாதீர் முஹம்மது தலைமை வகித்தபோது அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெரிய கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்டி) தலைவர்களாக அன்வர் இப்ராஹீமும் அவரது மனைவி வான் அஸீஸாவுமே உள்ளனர். மேலும் அன்வர் இப்ராஹீமின் கட்சியான மக்கள் நீதிக்கட்சி தான் கூட்டணியில் அதிக இடங்களை (50) வென்றது. மஹாதீரின் மலேசியன் யுனைடட் இண்டலிஜன்ஸ் கட்சிக்கு 13 இடங்களே கிடைத்தன.

அன்வர் இப்ராஹீமின் மனைவி வான் அஸீஸா மற்றும் மூத்த மகள் நூருல் இஸ்ஸாவும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராஹீம் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை அவரிடம் ஒப்படைப்பேன் என்று மஹாதீர் முஹம்மது அறிவித்துள்ளார். இக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த இன்னொரு கட்சியான சீன வம்சாவழியினரின் செல்வாக்கை பெற்ற டெமோக்ரடிக் ஆக்ஷன் கட்சி 42 இடங்களை வென்றது. அரசு எந்திரங்களையும், ஊடகங்களையும் விலைக்கு வாங்கி ஆளுங்கட்சி நடத்திய அனைத்து விதமான பொய் பரப்புரைகளையும் தகர்த்து மக்கள், எதிர்கட்சி கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.