வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்

0

வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீயில் 13000 கோடி ரூபாய் ஊழல் செய்து தலைமறைவான நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்ஸி ஆகியோர் குறித்த கோப்புகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

தெற்கு மும்பையில் உள்ள சிந்தியா ஹவுஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த நெருப்பு கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணியில் தொடங்கி சனிக்கிழமை காலை வரை எரிந்ததாகவும் இந்த தீயில் குறிப்பிட்ட கோப்புக்கள் சேதமடைந்து அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது நான்காம் கட்ட நெருப்பு என்று தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீயின் போது கட்டிடத்தில் மாட்டிக்கொண்ட எழு நபர்களை தீயணைப்புத்துறை மீட்டனர்.

தீயியனை அனைத்து சனிக்கிழமை மாலை நிலைமையை தீயணைப்புத்துறை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தான் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த வளாகத்திற்குள் தீயணைப்புத்துறையால் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்புத்துறையிடம் இருந்து கிடைத்த முதற்கட்ட தகவலின் அடிப்படையில் இந்த தீ, வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து தான் தொடங்கியதாக தெரிகிறது.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, இந்த நிகழ்வு பணத்தை ஏமாற்றி பெற்றி நாட்டைவிட்டு தப்பியயோடியதோடு நரேந்திர மோடியுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்ட நிரவ் மோடிக்கு வசதியாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

முன்னர் நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சொக்ஸி ஆகியோர் குறித்த கோப்புகள் அழிந்துவிட்டதாக வருமான வரித்துறையினர் கூறியதாக தி டிரிபியூன் தளம் (இப்பக்கத்தில்) செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது அந்த செய்தி நீக்கப்பட்ட நிலையில், வருமான வரித்துறையின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவு ஒன்றில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருப்பின் காரணம் குறித்து MRA மார்க் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், தாங்கள் கட்டிடத்தில் இருந்தவர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெற்று விசாரித்து வருவதாகவும் சிலர் மின்கசிவு ஏற்பட்டதை கண்டதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் அது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதா என்றும் அதன் நோக்கம் குறித்தும் தற்போது கூற இயலாது என்று மூத்த காவல் ஆய்வாளர் சுக்லால் வார்பே தெரிவித்துள்ளார்.

Comments are closed.