வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சியில் டிசம்பர் 13 அன்று நடைபெற்றது. Empowering Legal Knowledge என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு வழக்கறிஞர்கள் உரையாற்றினர். தமிழகம் முழுவதும் இருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜகான் நிகழ்ச்சியை தொடங்கி அறிமுக உரையாற்றினார். மூத்த வழக்கறிஞரும் மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் (NCHRO) மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன் குற்றவியல் வழக்கு நடைமுறை குறித்தும் குறுக்கு விசாரணை குறித்தும் தெளிவாக விளக்கினார். உயர்நீதி மன்ற வழக்கறிஞர் எஸ்.ஏ.எஸ். அலாவுதீன் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்தும் கும்பகோணம் சாஸ்தா பல்கலைக்கழக பேராசிரியர் நிலாமுதீன் தனி நபர் சட்டம் குறித்தும் உரையாற்றினார்கள்.
இறுதியாக, மௌலவி அன்சாரி பைஜி நீதியை நிலைநாட்டுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Comments are closed.