வழக்கறிஞர் செம்மணி மீதான காவல்துறை அராஜகம்: 6 காவலர்கள் பணியிடைநீக்கம்

0

நெல்லை மாவட்டம் மாறன்குளத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் செம்மணி. கடந்த நவம்பர் 3ஆம் தேதி தனது வீட்டில் இருந்த இவரை பணகுடி போலீஸார் எந்தவித காரணமும் இன்றி சட்டத்திற்கு புறம்பாக அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை அவரது வீட்டில் இருந்து கடத்திச் சென்றனர்.

இந்த கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் இந்த காவல்துறை அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த தாக்குதலில் தொடர்புடைய காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டன.

தங்கள் கோரிக்கையை ஏற்று காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 12 ஆம் தேதி நெல்லையில் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரவுள்ள முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்டவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் டி.எஸ்.பி. குமார், காவல்துறை ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், உள்ளிட்ட அதிகாரிகள் ஆயுதப்படை பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் ஸ்டீபன் ஜோஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை ஏற்றுகொள்ளாத வழக்கறிஞர் சங்கம் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்ததினால் தற்போது ஸ்டீபன் ஜோஸ் உடன் காவல்துறை உதவி ஆய்வாளர் பழனி, செல்லத்துரை, சிறப்பு தனிப்படை காவலர் ஜோன்ஸ், நாகராஜன், சந்தன பாண்டியன் ஆகிய ஐந்து காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை நெல்லை டி.ஐ.ஜி. கபில் குமார் வெளியிட்டார்.

Comments are closed.