வழி காட்டும் விளக்குகள்

0

வழி காட்டும் விளக்குகள்

“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்ட வேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்கு கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”(அல்குர்ஆன் 98:5)

வேத நூல் வழங்கப்பட்ட பிறகு வேதத்தின் கட்டளைகளை குறுகிய நோக்கத்துடன் அணுகி, தர்க்கம் புரிந்து, பிரிந்து சென்ற சமூகங்களை சுட்டிக்காட்டி அல்லாஹ் இந்த வசனத்தை நமக்கு போதிக்கிறான்.

இந்த வசனத்தில் அல்லாஹ் அழுத்தம் திருத்தமாக கூறும் கட்டளைகளின் சாராம்சம் என்ன? வணக்க, வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டுமே செலுத்த வேண்டும். அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களுக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும். இவ்விஷயத்தில் எவ்வித களங்கமோ, குறுகிய நலனோ, பிழையோ உருவாகக் கூடாது. இது மனிதனின் உள ரீதியான நிலையாகும்.அத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் தொழுவதும், சமூக ஈடுபாட்டை எடுத்தியம்பும் ஜகாத்தும் எப்போதும் அனைத்து விதமான அழகுடன் வெளிப்பட வேண்டிய இரண்டு அடையாளங்களாகும்.

ஒரு ஊரில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அந்த ஊரில் உள்ள மஸ்ஜிதில் ஒன்று கூடி கூட்டாக ஐவேளை தொழுகைகளை நடத்தும் நல்லிணக்கமான சூழலும், அதே முஸ்லிம்களின் பொருளாதார கஷ்டங்களை பரஸ்பரம் புரிந்து கொண்டு இருப்பவர்களிடமிருந்து செல்வத்தை சேகரித்து இல்லாதவர்களுக்கு விநியோகிக்கும் ஜகாத் கட்டமைப்பும் முஸ்லிம் உம்மத்தின் அடிப்படை பண்புகளாகும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.